வாயில் | மொழி தேர்வு | பதிவிறக்கங்கள் | வினாக்கள் | Help Manual | தொடர்புக்கு (புதிய கட்டணமற்ற தொலைபேசி எண்‍) | | ;Site Map
 
 
இந்திய மொழிகளுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி

மக்களிடையே தொடர்பு என்பது இயற்கையாக பல முறைமைகளில் இருக்கிறது, இதில் பார்த்தல் மற்றும் கேட்டல் முறைமைகள் முதன்மையானவை. தற்போது, மனித இயந்திர தொடர்புகளின் மூலதனம் என்பது மக்களை விட இயந்திரங்களை சார்ந்தே இருக்கிறது. மவுஸ் மற்றும் விசைப்பலகை முதன்மை உள்ளீடு சாதனங்கள் மற்றும் காட்சி பார்வை பகுதி முதன்மை வெளிப்பாடு சாதனமாகும். இந்த முகப்புகளின் பயன்பாட்டிற்கு சிறப்பான திறமைகள் மற்றும் நல்ல மனநிலையும் தேவைப்படுகிறது, இது பலருக்குக் கிடைக்கப்பெறாததாக உள்ளது. இந்த இயந்திர மைய தொடர்பு முறைமை மனித மைய முகப்புக்கு ஏற்றதாக மாற்றப்பட வேண்டியிருக்கிறது, எனவே அனைத்து மக்களும் கணினியின் செயல்திறனை பகிர்ந்து கொள்ளும் நன்மையைப் பெறுவார்கள். பார்வை முறைமை தகவல்களை கைப்பற்றுவதில் அதிக திறன்வாய்ந்ததாக இருப்பதால், பேசுதல் தகவல்களை பரிமாற விருப்பப்படுவதும் மிகவும் ஏற்றதாகவும் உள்ளது. வாய்வழி தொடர்பின் நன்மை இன்று கணினி மற்றும் தொலைத்தொடர்பு முறைமைகளில் அணுக சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது, இது தொலைவிலுள்ள கணினியின் தகவலை மக்கள் அணுக அனுமதிக்கிறது.

வாய்வழி தொடர்பு இயல் மொழியை கொண்டுள்ளது மற்றும் இது தகவல் தொழில்நுட்பத்தில் மொழி வல்லுனர்களுக்கு முக்கிய பங்கை கொண்டுவருகிறது. எனவே, மனித-மைய முகப்பு கணினிக்குத் தேவைப்படுகிறது. மக்கள் ஒரு தனித்த மொழி கலையைக் கொண்டு தகவல்கள், எண்ணங்கள் மற்றும் யோசனைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். மனித இயந்திர ஊடாடலை இயல் மொழி கொண்டு எளிமையாக்க மனித மொழி தொழில்நுட்பத்தில் பல பக்கங்கள் உள்ளன: பேச்சு குறுக்குதல், உணர்தல் மற்றும் பேச்சு மற்றும் ஸ்கிரிப்ட்களை புரிந்து கொள்ளுதல், இயந்திர மொழிபெயர்ப்பு, உரை உருவாக்கம், பேச்சின் ஒருங்கிணைத்தல் மற்றும் ஸ்கிரிப்ட் தொடர் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கணினியுடன் ஊடாட மொழியின் பேச்சு மற்றும் எழுத்து இரண்டு வடிவங்களும் பயனுள்ளதாக இருக்கும்.
கணினியில் இந்திய மொழிகளில் வேலை செய்வது கடந்த இருபது ஆண்டுகளாக செய்யப்படுகிறது. இதில் பல்வேறு பணிகளை செய்கிறது, தரவு செயலி, சொல் செயலி, டெஸ்க்டாப் பப்ளிஷிங் முதலியவை வேறுபட்ட இயக்கத்தளங்களில் செய்யப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப துறை தகவல் செயல்படுத்தும் கருவிகள் உருவாக்குதல் மற்றும் மொழி பிரச்சனை இல்லாமல் மக்களும் கணினியும் ஊடாடவும்; பல மொழிசார்ந்த அறிவு மூலங்களை உருவாக்கி அணுகவும்; அவற்றை ஒருங்கிணைத்து பயனர் மென்பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும் நோக்கத்திற்காக TDIL (இந்திய மொழிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி) திட்டத்தை துவக்கியது. மொழிசார்ந்த மூலங்களான கார்போரா மற்றும் அகராதிகள் மற்றும் அடிப்படை தகவல் செயல்படுத்தும் கருவிகளான எழுத்துருகள், உரை தொகுப்பி, சொல் திருத்தி, ஓசிஆர், உரையிலிருந்து பேசுதல் போன்ற திட்டங்களுக்கு நிதியளிக்கப்பட்டது. இதில் தரப்படுத்தலும் சேரும்.

நாட்டில் இந்திய மொழி தொழில்நுட்ப மென்பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பல்வேறு முயற்சிகள் பல்வேறு இடங்களில் தனியாராக, பொது நிறுவனமாகவும், அரசு நிறுவனமாக பல்வேறு நிலைகளில் நடந்து கொண்டிருக்கிறது. ஆராய்ச்சி மையங்கள் மற்றும் Coilnet மையங்களால் உருவாக்கப்படும் மொழி தொழில்நுட்பங்களுக்கு மறுமொழி உருவாக்கப்பட்டு விரைவாக அவை மென்பொருளாக கிடைக்க செய்யவேண்டும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முயற்சிகள் சமுதாயத்தை பெரிய அளவில் பாதிப்படைய செய்ய வேண்டும். அதாவது அதன் உருவாக்க முயற்சி ஆய்வகத்திலேயே முடங்காமல், விரைவாக விநியோகத்திற்கு வர வேண்டும், இது கடைசியாக பயனர்கள் மறுமொழி மற்றும் அனுபவத்திற்கு வந்து மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.

அரசு பின்வரும் மென்பொருட்கள் மற்றும் தீர்வுகளை பொது மக்களுக்கு அடுத்த ஒரு வருடத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது:

அனைத்து இந்திய மொழிகளுக்கும் இலவச எழுத்துருக்கள் (TTF மற்றும் OTF) மற்றும் சொற்செயலிகள். அதன் முதல் படியாக, செம்மொழி தமிழுக்கான அச்சுத்துறையில் பிரபலமாக இருக்கும் ட்ரு டைப் எழுத்துருக்களை (TTF) இலவசமாக பொது மக்களுக்கு வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. TTF எழுத்துருக்கள் பரவலாக Windows 95/ Windows 98/ Windows NT இயக்கத்தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. Windows 2000/XP/2003 மற்றும் லினக்ஸ் இயக்கத்தளங்களுக்கு OTF (Open type font) எழுத்துருக்கள் வெளியிடப்படுகிறது. இது முதல் முயற்சியாக பெரும்பாலான சொற்செயலிகளில் (ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய) இந்த எழுத்துருக்களை பயன்படுத்தலாம். இந்த முறையில் டேட்டா எண்டரி செய்ய தமிழ் 99 மற்றும் தட்டச்சு விசைப்பலகையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பல எழுத்துருக்கள் கிடைக்கப்பெறும்.

Optical Character recognition (OCR) அனைத்து இந்திய மொழிகளிலும் தகவல்களை பிரித்தல், எடுத்தல் மற்றும் டிஜிட்டல் முறைப்படுத்துதல். OCR ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை (ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட அச்சிடப்பட்ட பக்கம்) திருத்தக்கூடிய உரையாக மாற்றுகிறது. எனவே இது வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு அதற்கேற்றவாறு மாற்றப்படுகிறது. அச்சுத்துறை இதனால் பெரிய நன்மையடையும் இந்த மென்பொருளை பயன்படுத்தி பழைய புத்தகங்களின் புதிய பதிப்பைக் கொண்டுவரலாம்.

இரயில்வே தகவல், உடல்நலம், விவசாயம், பேரிடர் மேலாண்மை மற்றும் வேறு பொது வசதி சேவைகளுக்கான முறைமையில் பேச்சு முகப்புகள். இது இந்திய மொழிகளில் மக்களுக்கு பெரிய அளவில் நன்மையை நவீன தொழில்நுட்பம் மூலம் வழங்கும். இந்த முறைமையின் முகப்பு பேச்சு உணர்தல் இயந்திரத்தைக் கொண்டு நம் ஒலியை உணர்ந்து அவற்றை உரையாக மாற்றி தகவலை பிரிக்கலாம். உரையிலிருந்து பேச்சு நுட்பத்தின் மூலம் கண்பார்வையற்றவர்களுக்கு இணையம் போன்றவற்றிலிருந்து தகவலைப் படித்து காட்டலாம்.

இந்திய மொழிகளில் இணையத்தை அணுகும் கருவிகளான உலாவிகள், தேடும் பொறிகள் மற்றும் மின்னஞ்சல். இதன் உதவியால் இந்திய மொழிகளில் மின்னஞ்சல் அனுப்புவது, தேடும் பொறியில் இந்திய மொழிகளில் வினாவை கொடுத்து இந்திய மொழிகளில் தகவல்களை தேடுவது போன்றவை சாத்தியமாகும்.

அரசு பின்வரும் மென்பொருட்கள் மற்றும் தீர்வுகளை பொது மக்களுக்கு அடுத்த ஒரு வருடத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது:
மென்பொருட்கள்/சேவைகள் TDIL தரவு மையத்தின் வழியாக ஆன்லைன் உதவிமையங்கள் மூலம் செய்யப்படுகிறது.

அரசு TDIL-DCக்கான (மொழி தொழில்நுட்ப வசதிகள் பகிர்வு சேனல்) ஆராய்ச்சி, உற்பத்தி, விநியோகம் மற்றும் சேவையை பின்வரும் வழியில் செய்வதற்கான நோக்கமும் கால அளவையும் கொண்டு திட்டம் வைத்துள்ளது

உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை சந்தைக்குக் காட்டுதல்

மென்பொருட்களை முறைபடுத்த தொழில்நுட்பங்களை மேம்படுத்தல் அல்லது சீர்படுத்துதல்

தேவையைப் பொருத்து புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல்
இந்த நோக்கங்களை அடையும் பொருட்டு, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது

1. TDIL தரவு மையம் வழியாக இந்திய மொழி தொழில்நுட்பங்கள்/கருவிகள் விநியோகம் படிப்படியாக செய்யப்படுகிறது

2. உருவாக்கப்பட்ட கருவிகள், தொழில்நுட்பங்கள், மென்பொருட்கள் மற்றும் சேவைகளை கைப்பற்றுதல்

3. இருக்கும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழியாக மொழி தொழில்நுட்ப பகுதிகளில் அரசின் முயற்சிகளை பொதுவாக்கி விழிப்புணர்வைப் பரப்புதல்

4. கருவிகள் , வசதிகள், மென்பொருள் முதலியவற்றிற்கான இலவச பதிவிறக்குதலைப் பயனருக்கு எளிதாக்குதல்.

5. மொழி தொழில்நுட்பத்தில் பொது-தனிப்பட்ட பங்காளர்களை ஊக்கமளித்தல்6. குறிப்பிட்ட பயன்பாட்டு பகுதிகளின் நோக்கங்களை நிறுவுதல்